ஹுணுப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே இந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஆவார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.