அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலை அடுத்துள்ள கோமாரிப் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி 46 வயது உடைய குடும்பஸ்தர் ஒருவர் பலியாகி உள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான விவசாயி ஜெயரட்ணம் நவநேசன் (வயது-46) இவ்வாறு பலியானவராவார்.
இச்சம்பவம் இன்று (18) திங்கட்கிழமை அதிகாலை ஒரு மணி அளவில் கோமாரி காட்டுவெளி பூனைப் போக்குப் பகுதியில் இடம்பெற்றது.
வயல் காவலுக்காக சென்ற விவசாயியான இவரது பிரேதம் பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.