பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்த சந்தேக நபர் ஒருவர் தனது வீட்டுக்குச் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று (18) காலை இச்சம்பவம் மொறவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வண்ணக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.
வண்ணான்குளம், லபுனோறுவ பகுதியைச் சேர்ந்தவர் 35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகாத உறவின் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலங்கள் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
காயமடைந்தவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மொரகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.