காலி – எல்பிட்டிய, மத்தேவில பிரதேசத்தில் இளைஞனொருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று (18) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞன், கறுவா தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்தேவில பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மின்னல் தாக்கி படுகாயமடைந்த இளைஞன் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்களை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.