வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார்.
மின்சார தாக்குதலுக்கு உள்ளான அவர் செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் ஆண்டியாபுளியன்குளம் பகுதியைச் சேர்ந்த 59 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.