அதிகமான சளி ஏற்பட்ட தன் காரணமாக வரணியில் ஒரு மாத ஆண் குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.
இதில் வரணி வடக்கு, வரணியைச் சேர்ந்த வேணுதன் பிரித்தி என்ற ஒரு மாத ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.
கடந்த 16 ஆம் திகதி சனிக்கிழமை குறித்த குழந்தைக்கு 31 அன்று குளிக்கவாக்கப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை சளி பிடித்ததைத் தொடர்ந்து பிற்பகல் 3.00 மணியளவில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றுமுன்தினம் (17) நள்ளிரவு குழந்தை உயிரிழந்துள்ளது.
இம்மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.