இரு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் கணித ஆசிரியர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி, எல்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் 54 வயதுடைய கணித ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் 10 வயதுடைய இரு மாணவிகளே பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகியுள்ளனர்.
இது தொடர்பில் தெரியவருவதாவது…
சந்தேக நபர் தனது பாடசாலையில் கல்வி கற்கும் மாணவிகளுக்கு மேலதிக வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இதன்போது, சந்தேக நபரான கணித ஆசிரியர் இந்த இரு மாணவிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பின்னர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர். இதனையடுத்து, பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று செவ்வாய்க்கிழமை (19) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.