ரயிலில் பயணித்த இளைஞன் உயிரிழப்பு.. நடந்தது என்ன..?

0
109

ரயில் மிதி பலகையில் பயணித்த போதே குறித்த இளைஞர் ரயில் பாதைக்கு அருகில் உள்ள சமிக்ஞை கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார் என கூறப்படுகின்றது.

பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற விரைவு ரயிலில் பயணித்த இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று (18) காலை இடம்பெற்றுள்ளது. கணேமுல்ல தெனிய வீதியில் வசிக்கும் 21 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. கிரிபத்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாதுகாப்பாக பயணம் செய்வதன் மூலம் உயிர் சேதங்களை குறைத்துக்கொள்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here