புதுக்குடியிருப்பில் வெகனார் காரில் மாடு கடத்தல் சம்பவம்.. நடந்தது என்ன..?

0
195

மாடுகளை கடத்தி செல்வதற்கு பயன்படுத்தபட்டதாக சந்தேகிகிக்கப்படும் வாகனத்தினை புதுக்குடியிருப்பு பகுதியில் வைத்து கடந்த (15.11.2024) இரவு இளைஞர்கள் மடக்கி பிடித்த சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது.

ஆனால் அதில் மாட்டியது ஒரு அப்பாவி என எமது ஊடகத்திற்கு தெரியவந்துள்ளது.

இதில் மேலும் தெரியவருகையில்…

முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 4, 5 மாதங்கள் வாடகைக்கு (வெகனார்) காரை விடுவந்துள்ளார். குறித்த வாகன உரிமையாளரான இளைஞன் ஓர் காப்புறுதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார் என தெரியவந்துள்ளது.

குறித்த இளைஞனிடம் ஒரு கும்பல் வந்து (வெகனார்) காரை வாடகைக்கு எடுத்து சென்று மாடுகளை கடத்தி வந்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

குறித்த கும்பல் புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, முல்லைத்தீவு போன்ற இடங்களில் மாடுகளை கடத்தி வந்துள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக வளர்ப்பு மாடுகள் திருட்டுப்போகும் சம்பவங்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. கடந்த மாதம் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பகுதியில் வீட்டு காணி ஒன்றில் இருந்த சிறிய பட்டியில் சிறுகன்றுகளின் தாய் மாடுகளினை கன்றுகளை தவிக்கவிட்டு மனிதாபிமானம் அற்ற நிலையில் திருடிச்சென்றிருந்தனர். அதேபோல் புதுக்குடியிருப்பு பகுதிகளில் அதிகளவான வளர்ப்பு மாடுகள் திருட்டு போயிருந்தது.

இதனையடுத்து குறித்த கால்நடைவளர்ப்பு உரிமையாளர்களினால் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படவில்லை.

இதனையடுத்து மாடு கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு வெகனார் ரக வாகனம் நடமாடுவதை குறித்த கிராம மக்கள் அவதானித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிடிக்க முயற்சி செய்து பலனளிக்காத நிலையில் வாகன இலக்கத்தினை கண்காணித்து வைத்திருந்தனர். கடந்த தினமன்று குறித்த வெகனார் ரக வாகனம் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சென்ற நிலையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மடக்கி பிடித்து பொலிஸில் கொடுத்துள்ளனர்.

குறித்த வாகனத்தை நீதிமன்றில் முற்படுத்தி வாகன உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார், இந்த சம்பவம் மூலம கடந்த 5 நாட்கள் வாகன உரிமையாளர் தடுப்பு காவலில் இருந்துள்ளார் என தெரியவருகிறது.

வாடகைக்கு கார் பெற்று சென்ற நபர்கள் தொடர்பில ஆதாரங்கள் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட போதிலும் அது தொடர்பாக அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

முள்ளிவாய்க்கால் பகுதியை சேர்ந்தவர்களும். புதுக்குடியிருப்பு, செல்வபுரம் பகுதியை சேர்ந்த காவலிகளே இந்த (வெகனார்) காரை வாடகைக்கு எடுத்து சென்று மாடுகளை கடத்தி உள்ளனர். குறித்த கள்வர்கள் தொடர்பான ஆதாரங்கள் மாடு உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது,

முல்லைத்தீவில் வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் கவனமாக இருங்கள்.. உங்களுடைய வாகனங்களிலும் மாடுகள் கடத்தப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here