காலி, நாகொடை பத்தேகம வீதியில் கிங் கங்கையின் குறுக்கே உள்ள இரும்புப் பாலத்தில் திருத்த வேலை செய்து கொண்டிருந்த நபரொருவர் இன்று (21) மாலை பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
பாலத்தின் நடுவில் உள்ள கம்பிகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நாகொடை பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நாகொடை பொலிஸாரும் பிரதேசவாசிகளும் தற்போது சடலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.