இந்தியா – திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் ரவிதாஸ் பணிபுரிந்து வருகிறார். இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.
இவருடைய மகள் 16 வயது நந்தினி. இவர் நவம்பர் 14ம் தேதி வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது, ஸ்டவ் அடுப்பில் இருந்து சோற்றை வடிக்கும்போது திடீரென கைதவறி கொதிக்கும் வடிகஞ்சி அவருடைய உடல் முழுவதும் கொட்டிவிட்டது.
இதில் படுகாயமடைந்த நந்தினியை அவரது பெற்றோர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நந்தினி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் வடமாநில குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் எற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.