மல்லாவி வன்னிவிளாங்குளம் பகுதியில் 20.11.2024 மாலை இடம்பெற்ற விபத்தில் 02 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாங்குளத்திலிருந்து மல்லாவி நோக்கி வந்த மோட்டார் வண்டியும் மல்லாவி பகுதியிலிருந்து மாங்குளம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
சம்பவத்தில் வன்னிவிளாங்குளம் பகுதியை சேர்ந்த சந்திரன் விதுசன் (வயது-20), புதிய கொலணி மாங்குளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் விதுர்சன் (வயது-20) என்ற இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை படுகாயமடைந்த மாங்குளம் பகுதியை சேர்ந்த மற்றைய இளைஞர் மாங்குளம் வைத்தியசாலை நோயாளர் காவுவண்டி ஊடாக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை உயிரிழந்த இருவரின் சடலங்களும் மாங்குளம் ஆதார வைத்திய சாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளன, மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.