அஸ்வெசும பயானாளிகளின் குடும்பங்களில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ளது.
இதன்படி, சிரேஷ்ட பிரஜைகளின் அஸ்வெசும ரூ.3000 கொடுப்பனவானது, குடும்பத்தினரின் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிரேஷ்ட பிரஜைகளின் கொடுப்பனவானது, இம்மாதம் முதல் குடும்பத்தினரின் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது
இதேவேளை, 2024 ஆம் ஆண்டு வரவு – செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.