நவம்பர் 22 ஆம் திகதி வெள்ளிக் கிழமையான இன்று உங்கள் ராசிக்கான பலன்கள்..!

0
71

மேஷம்:
அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

ரிஷபம்:
உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.

மிதுனம்;
விமர்சனங்களும், வீண் பழியும் வந்து செல்லும். திறமை இருந்தும், கடினமாக உழைத்தும் அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டேயிருப்பீர்கள். அதிகாரிகள் ஆதரவாகப் பேசினாலும் கூடுதலாக உங்களுக்கு வேலைகளைத் தருவார்கள். சலித்துக் கொள்ளாமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுப்பது நல்லது. சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றம் வரும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு சற்றுத் தாமதமாகக் கிடைக்கும். கொடுக்கல் – வாங்கல் விஷயத்தில் கறாராக இருங்கள். சரக்குகள் கொள்முதல் செய்யும் போது கவனம் தேவை. சந்தை நிலவரத்தை தெரிந்து செயல்படப்பாருங்கள்.

கடகம்:
மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும்.

கன்னி:
அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத் தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

துலாம்:
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத் துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்:
வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டா லும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை தேவை.

தனுசு:
புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். அக்கம்பக்கத் தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். பொறுமை அவசியம். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்களால் வீண் விரயம் ஏற்படக்கூடும்.

மகரம்:
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கும்பம்:
பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும். லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.

மீனம்:
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புண்டு. பிள்ளைகள் வழியில் எதிர் பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடு வதையும் தவிர்ப்பது நல்லது. உறவி னர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here