யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். பொன்னாலை மேற்கு பகுதியை சேர்ந்த நடனேஷ்வரன் தாரணி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்…
குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்றுகாலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது. குறித்த மாணவியின் பேர்த்தியார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர்.
இதன் போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.