முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் கரிசல் வயல்வெளிப்பகதியில் கூலி வேலைக்காக சென்ற 38 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலமாக மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
23.11.2024 இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, சுதந்திரபுரம் மத்தி உடையார்கட்டுப்பகுதியினை சேர்ந்த சிவஞானம் றமேஸ்குமார் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரிசல் வயல் பகுதியில் வயல் வேலைக்கு சென்று வருபவர், வயல் வேலை இல்லாத காலத்தில் கடற்கரையில் உள்ள வாடிகளில் வேலைசெய்து வந்துள்ளார்.
நேற்று மாலை உடல் நிலை ஏலாத காரணத்தினால் அங்குள்ள கொட்டிலில் படுத்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.