முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட 7 ஆம் வட்டாரம் சிவநகர் பகுதியில் கடந்த 21.11.2024 அன்று இரவு வீட்டினை உடைத்து வீட்டில் இருந்த மூன்று இலட்சத்தி ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்ட தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக 22.11.2024 அன்று புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்ப பெண் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.