இந்த ராசியினர் பணத்தை சேமித்து வைப்பதில் கில்லாடிகளாம்.!

0
83

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் பணத்தை கையாளுவதிலும் சேமிப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.

அப்படி பணத்தை சேமிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் செல்வ செழிப்பின் அதிபதியான சுக்கரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். இதனால் இவர்களுக்கு இயல்பாகவே பணத்தின் மீது அதிக ஆசை மற்றும் ஈடுபாடு இருக்கும். ஆடம்பரமான வாழ்வை வாழ விரும்பும் இவர்கள் சிறந்த நிதி முகாமைத்துவ அறிவை கொண்டவர்களாக இருப்பார்கள். கொஞ்சமாக பணம் இருந்தாலும் அதனை எப்படி இரண்டு மடங்காக மாற்றுவது என்பதில் வல்லர்களான இருப்பார்கள். இவர்கள் எதிர்காலத்துக்காக பணத்தை சேமித்து வைப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். பணத்தின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசியில் பிறந்தவர்கள் அறிவாற்றலுக்கு அதிபதியாக திகழும் புதன் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள்.அதனால் அவர்கள் நிதி விடயத்தில் தெளிந்த அறிவை இயல்பாகவே பெற்றிருப்பார்கள். எந்த பொருள் அவசியமோ அதை மட்டும் திட்டமிட்டு வாங்குவதில் கில்லாடிகளாக இருப்பார்கள். இவர்களுக்கு நிதி முகாமைத்து அறிவு சிறப்பாக இருக்கும். இவர்கள் பெரும்பாலும் பணம் சம்பந்தமான வி்யங்களை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ள விரும்பமாட்டார்கள். ஆனால் பணத்தை சேமித்து வைக்கும் குணம் இவர்களிடம் நிச்சயம் இருக்கும்.

மகரம்
மகர ராசியில் பிறந்தவர்கள் நீதியின் கடவுளாகிய சனி பகவானின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் என்பதால் நேர்மையான வழிகளில் சம்பாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். இவர்கள் லட்சியவாதிகளாகவும் நிதி தொடர்பில் அறிவாற்றல் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். இந்த ராசியினர் தங்களுக்காக இல்லாவிட்டாலும் இவர்களின் அன்புக்குரியவர்களுக்காக பணத்தை சேமிக்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here