2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதன்போது, இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரவை ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வாங்கியுள்ளது.
அதன்படி, நுவன் துஷார 1.60 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளார்..
இது இலங்கை ரூபாவில் 5.50 கோடி ரூபாயாகும்.
எதிர்வரும் இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான வீரர்கள் ஏலம் தற்போது சவுதி அரேபியாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.