இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின் செயற்பாடுகள் தொடர்பில் எதிர்காலத்தில் அவருடனும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஊடகவியலாளர் – அர்ச்சுனா என்ற உறுப்பினர் பாராளுமன்றில் அநாகரீயமாக நடந்து கொள்கிறாரா?
சபாநாயகர் கலாநிதி அசோகா ரங்வல – “அந்த நடவடிக்கையின் போது, சபாநாயகர் நியமனம் கூட முடிக்கப்படவில்லை. எனவே, இந்த நடவடிக்கை உத்தியோகபூர்வ நிலையில் செய்யப்படவில்லை. அது குறித்து சட்டப்பூர்வமாக நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது. எதிர்காலத்தில் , இந்த விவகாரம் குறித்து அந்த பாராளுமன்ற உறுப்பினருடனும், மற்ற உறுப்பினர்களுடனும் விவாதிப்போம், சட்டத்திற்கு விரோதமாக ஏதாவது நடந்திருந்தால் நாங்கள் பார்த்துக் கொள்வோம்.
ஊடகவியலாளர் – தமிழ் ஈழத்தில் இருந்து என அவர் ஆரம்பிக்கிறார்?
சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல – “தனி ஒருவரான அவரின் இலட்சியம் என்னவென்று எமக்குத் தெரியாது. அவர் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் இலட்சியம் மிகத் தெளிவாக உள்ளது. இன்று நாட்டில் அவ்வாறானதொன்றை மக்கள் எதிர்பார்க்கவில்லை. எம்.பி.க்கள் அனைவரும் இவ்விடயத்தில் ஒற்றுமையாக உள்ளனர். .மீண்டும் ஒரு தாக்குதல் நிலைக்கு செல்வது நல்லது என்று நாங்கள் நம்பவில்லை.”