மனித கடத்தலால் பாதிப்புக்குள்ளான நிலையில் மியன்மாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 32 இலங்கை பிரஜைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்டவர்களில் 24 ஆண்களும் 8 பெண்களும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சு, தாய்லாந்து மற்றும் மியன்மாரில் உள்ள இலங்கை தூதுவர்கள் இணைந்து இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும் தற்போது தாய்லாந்தின் தக் மாகாணத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.