மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதியில்லை – அரசாங்கம்..!

0
64

உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதற்கு எந்தவொரு தடையும் இல்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாளர் மாநாட்டில் மாவீரர் தின அனுஷ்டிப்பு தொடர்பில் ஊடகவியலாளரினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29ஆம் திகதி அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய, தீவிரவாத மற்றும் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றுக்காக நிதி சேகரித்தல், ஒன்று கூடுதல், பிரசாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த அமைப்பின் கொடி, இலச்சினை மற்றும் கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமையவே, நாம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளோம். இதன்படி, தடைசெய்யப்பட்ட அமைப்பின் கொடி, இலச்சினை கீதம் ஆகியவற்றினை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவாக்கக் கூறிக் கொள்கின்றோம்.

அதேநேரம், உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்விற்கு இடையூறு விளைவிப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் இல்லை. உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்வதும் தடை செய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதும் ஒன்றல்ல.

ஆகவே இதனைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

உயிரிழந்த உறவினர்களை நினைவுகூர்வதற்கு உரிமை வழங்கப்பட்டுள்ள அதேநேரம் அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அமைப்பொன்றை நினைவுகூருவதற்கு எந்தவகையிலும் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here