புனேவ கும்புகொல்லேவ பிரதேசத்தில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று செவ்வாய்க்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.
கடும் மழை பெய்துவரும் இந்நாட்களில் சாலை வழுக்கும் நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த பெண் இதய நோயாளி என்றும், பஸ் கவிழ்ந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியில் ஸ்தலத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் பஸ் சாரதி தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புனேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.