பதுளையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த சம்பவம்..!

0
50

கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் பதுளை, மீகஹகிவுல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய மனைவி ஆவார். குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது…

உயிரிழந்த மனைவி கடந்த திங்கட்கிழமை (25) மீகஹகிவுல நகரத்தில் தனது அலுவலகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது வீதியில் இருந்த கணவன் தனது மனைவியின் கை விரல்களை வெட்டியெடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இதனையடுத்து, காயமடைந்த மனைவி மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேக நபரான கணவன் கந்தகெட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பதுளை போதனா வைத்தியசாலையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த மனைவி நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here