அநுராதபுரம், கல்கிரியாகம பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (27) மின்சாரம் தாக்கி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக கல்கிரியாகம பொலிஸார் தெரிவித்தனர்.
கல்கிரியாகம, புப்போகம பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி மின்சாரம் தாக்கி காயமடைந்துள்ள நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.