பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (28) மாலை முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பானம கடற்படை முகாமின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.