முந்தலம 412 ஏக்கர் பகுதியில் மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று 28ஆம் திகதி இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஸ்டேன்லி திலகரத்ன (வயது-55) மற்றும் சந்திரிகா மல்காந்தி (வயது-52) என்ற தம்பதியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த இருவரும் தங்களுடைய குடியிருப்புக்கு அருகாமையில் வர்த்தக இடத்தை பராமரித்து வந்ததாகவும் வர்த்தக நிலையத்துக்கு மின்சாரம் வழங்கியதாக கூறப்படும் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய சென்ற கணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவனை காப்பாற்ற சென்ற மனைவியும் பலியாகியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பின்னர், அருகில் வசித்தவர்கள் இருவரையும் முந்தலமா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அவர்கள் உயிரிழந்துள்ளனர்.