பதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட திகல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29) மாலை மின்சாரம் தாக்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் ஹாலிஎல, திகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வயோதிபர் ஆவார்.
உயிரிழந்த வயோதிபர் தனது பயிர்களைக் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக வயலை சுற்றிப் பொருத்தியிருந்த மின்சார வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹாலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.