மதவாச்சி பூனாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 10:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
மதவாச்சி பூனாவ கடப்படை முகாமில் கடமையாற்றும், லெப்டினன்ட் கொமாண்டர் தர அதிகாரி ஒருவரே இவ்வாறு யானையின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பூனாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.