வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் கரையை கடந்த நிலையில் 47 செ.மீ அளவிற்கு அதி-கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து புதுவையில் மழை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவிலான மழை பொழிவு காரணமாக, புதுவை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வீடுகளை சுற்றி தேங்கி நிற்கும் மழைநீரால் தவிக்கும் மக்களை மீட்புப்படையினர் படகுகள் மூலம் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். ஃபெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அனைத்து அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் முகாம்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்தாலும், நகராமல் புதுச்சேரி அருகே ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது. புயல் ஒரே இடத்தில் நகராமல் இருப்பதால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இன்று மாலை வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.