மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 2025ம் ஆண்டுக்கான 30க்கு மேற்பட்ட NVQ மட்டம் 3,4 5 6லான புதிய கற்கை நெறிகள் ஆரம்பிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இக்கற்கை நெறிகளுக்கு க.பொ.த சாதாரணதரம் கற்று சித்தியடையாத மாணவர்களும் சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களும், க.பொ.த உயர்தரம் கற்ற மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
* இக்கற்கை நெறியை பயிலும் மாணவர்களுக்கு மாதாந்தம் 4000/- ரூபா நிபுணதா சிசு சலிய புலமைப்பரிசில் உதவித்தொகை வழங்கப்படும்.
* மானிய அடிப்படையிலான போக்குவரத்து சீசன் ரிக்கட் வசதி செய்து தரப்படும்.
* சுயதொழில் தொடங்குவதற்கு கடன்வசதி வங்கி மூலமாக செய்து தரப்படும்.
* உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வசதிகள் செய்து தரப்படும்.
விண்ணப்ப படிவங்கள் மற்றும் கற்கை நெறி தொடர்பான விடயங்களை தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றுக்கொள்ளலாம்.
https://ism.dtet.gov.lk/OnlineDTET/public/Application இல் இணையத்தளத்தின் ஊடாகவும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முடிவுத்திகதி 27.12.2024
(மேலதிக தகவல்களுக்கு 22.11.2024ம் திகதி அரச வர்த்தமானியை பார்வையிடவும்),