அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்.!

0
184

ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமை 2023.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 2384/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு 2024.07.01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த உத்தேச திட்டத்தின் கீழ் ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரிப் பயனாளிகள் குடும்பங்கள் 04 வகையான சமூகப் பிரிவின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.

பொருளாதார நெருக்கடிகளின் தாக்கங்கள் முழுமையாக நீங்காமையால், நிலையற்றவர்கள் மற்றும் ஆபத்துக்கு உட்பட்டவர்கள் ஆகிய சமூகப் பிரிவினர்களுக்குரிய முதலாம் சுற்று விண்ணப்பங்களுக்குரிய தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொடர்ந்து சில காலங்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சமகால வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொள்ளும் போது தற்போது வழங்கப்படுகின்ற கொடுப்பனவுத் தொகை போதியளவாக இன்மையென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு முறைமையைக் கீழ்க்காணும் வகையில் திருத்தம் செய்வதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் நிறுவுவதற்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

•வறியவர்கள் மற்றும் மிகவும் வறியவர்கள் சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகை முறையாக 8500 ரூபாவை 10,000 ரூபா வரைக்கும், 15,000 ரூபாவை 17,500 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கும் மற்றும் அதற்கிணங்க திருத்தப்பட்ட ஆறுதல் (அஸ்வெசும) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு உத்தேச திட்டத்தை பாராளுமன்றம் அங்கீகரிக்கின்ற நாள் தொடக்கம் நடைமுறைப்படுத்தல்,

•நிலையற்றவர்கள் எனும் சமூகப் பிரிவினருக்கான நலன்புரிக் கொடுப்பனவு செலுத்தப்படும் காலப்பகுதியை 2025.03.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல்,

•ஆபத்துக்கு உட்பட்ட சமூகப் பிரிவினருக்காக கொடுப்பனவுக் காலத்தை 2025.12.31 வரைக்கும் செல்லுபடியாகும் காலத்தை நீடித்தல் ஆகியனவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here