சூப்பர் சிங்கர் ஜூனியரில் கலக்கும் யாழ்பாணத்து குயில் பிரியங்கா..! இதோ வீடியோ

0
100

இந்திய தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சி தயாரித்து வழங்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியில் யாழ்ப்பாணம் (Jaffna) – கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிந்துமயூரன் பிரியங்கா என்ற 11 வயதுடைய சிறுமி போட்டியிடவுள்ளார்.

குறித்த போட்டியின் போட்டியாளர்களின் தெரிவுகள் யாவும் நிறைவுபெற்ற நிலையில் பாடல் போட்டியானது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை பி.ப 6.30 மணிக்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

குறித்த சிறுமி சிறுவயது முதல் இசையில் ஆர்வம் காட்டி வந்தநிலையில் கடந்த தை மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசை நிகழ்வின் மூலம் முன்னணி பாடகராக அறிமுகம் ஆனார்.
அதன் பின்னர் அவரது குரலின் இனிமை மற்றும் பாடல் திறமை போன்ற காரணங்களால் மேடை இசை நிகழ்வுகளில் அவருக்கு அதிக வரவேற்பு காணப்பட்டது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் – 10 போட்டியாளர்கள் தெரிவில் கலந்து கொண்டு அவரும் போட்டியில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அவரது பாடல் வெளியாகி உள்ளது. குறித்த சிறுமிக்கு பல்வேறு தரப்பினரும் தமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here