மேஷம்:
உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப் படும். ஆனால், புதிய முயற்சிகளை மட்டும் தவிர்த்துவிடுவது நல்லது.மாலையில் குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு அமையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல இருக்கும்.
ரிஷபம்:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. வியாபா ரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படக்கூடும்.
மிதுனம்:
எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் அலுத்துக்கொள் ளாமல் செய்து பாராட்டுப் பெறுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பர்.
கடகம்:
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. காரியங்களில் அனுகூலம் உண்டா கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். நண்பர்களிடம் கேட்ட உதவி கிடைக்கும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி செயல்பட்டு விற்பனையை அதிகரிப்பார்கள்.
சிம்மம்:
மனதில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. உணவு விஷயத்தில் கவனம் தேவை. அலுவல கத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.
கன்னி:
புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். எதிர்பார்த்த காரியம் தாமதமானாலும் முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித் தாலும் சக ஊழியர்களின் உதவி கிடைப்பதால் உற்சாகமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும்.
துலாம்;
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். புதிய முயற்சி சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. முக்கியப் பிரமுகர்களின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்.
விருச்சிகம்:
தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். உறவினர்கள் வருகையால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது மட்டும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், திடீர் செலவுகளும் ஏற்படும்.
தனுசு:
நல்ல வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக அமையும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நண்பர்கள் கேட்ட உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாகக் கிடைக்கும்.
மகரம்:
இறைவழிபாட்டுடன் நாளைத் தொடங்குவீர்கள். உங்கள் உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொள்ளும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள்.
கும்பம்:
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக்கொள்வார்கள். அவர்களின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் பணிகளில் உதவி செய்வீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
மீனம்;
அனுகூலமான நாளாக இருக்கும்.அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியக் கூடும். தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். சகோதரர் உதவி கேட்டு வருவார். அலுவலகத்தில் உங்கள் பணிகளை மற்றவர்களிடம் ஒப்படைக்காமல் நீங்களே செய்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆனால், பணியாளர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். சக வியாபா ரிகள் அனுசரணையாக இருப்பார்கள்.