ரயில் கடவையை கடக்க முற்பட்ட கார் ஒன்றின் மீது ரயில் மோதிய விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (03) இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலுடன் கார் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.