ஜனாதிபதியின் உருவத்தை உருவாக்கி 11 வயது சிறுவன் சாதனை.!

0
42

சன்சுல் செஹன்ஷ லக்மால் என்ற 11 வயது சிறுவன் 1,200 ரூபிக்ஸ் கியூப்களைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார்.

அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளார்.

சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நேற்று இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.

யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் இச் சாதனை நிகழ்த்தப்பட்டது.

சோழன் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸின் பொதுச் செயலாளர், இந்திரநாத் பெரேரா, துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, STEPS இன் இயக்குநரும், சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன், பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் இயக்குநர் மற்றும் சோழன் புக் ஒஃப் வேர்ல்ட் ரெக்கோர்ட்ஸ் இன் செயற்குழு உறுப்பினர் ஆகியோர், சிறுவனின் சாதனை முயற்சியை முறையாக கண்காணித்தனர்.

சன்சுலின் சாதனையை அங்கீகரிக்கும் வகையில், அமைப்பாளர்கள், ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, அவருக்கு சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவற்றுடன் அவரது பெரும் சாதனையை கௌரவிக்கும் வகையில் கோப்பையும் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here