கிளிநொச்சி – பரந்தன் – பூநகரி வீதியின் செல்விபுரம் வீதியின் கரையில், நீரினுள் முழ்கிய நிலையில் சடலம் ஒன்று இனம்காணப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது பூநகரி, பள்ளிக்குடா, செட்டியார் தரைவெளியைச் சேர்ந்த , 69 வயதுடைய முதியவரான செல்லையா கனிஷ்டநாதன் என காணப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக பூநகரி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.