உணவு ஒவ்வாமையால் 50 ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதி.!

0
7

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் சுமார் 50 ஊழியர்கள், இன்று தொழிற்சாலை வழங்கிய காலை உணவை உண்ட பின்னர், சுகவீனமடைந்து நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த ஊழியர்கள் தற்போது நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நோய்வாய்ப்பட்ட ஊழியர்களுக்கு மயக்கம், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கட்டுநாயக்க பொலிஸார், நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார், சீதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் பிரதேச பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here