தெமோதர ரயில் நிலையத்திற்கருகில் இன்று (05) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தெமோதர ரயில் நிலையத்தின் காவலாளி இன்று காலை ரயில் பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்தபோதே குறித்த சடலத்தை பார்த்து பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
தெமோதர பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராமகிருஷ்ணன் கிருஷ்ணகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர் நேற்று (04) இரவு 8.0 மணிக்குப் பின்னர் வீட்டில் இருக்கவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்ததுடன், மரணத்திற்கான காரணம் வெளிவராததால், பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.