சூரிய மண்டலத்தை விண்கற்கள் சுற்றி வருகின்றன.
அந்த வகையில் நேற்று முன்தினம் புவி வட்டப் பாதைக்குள் விண்கல் ஒன்று வந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
70 சென்ரிமீட்டர் விட்டம் கொண்ட இவ் விண்கல் சுமார் 12 மணித்தியாலம் கழித்து ரசியாவின் யாகுடியா பகுதியில் விழுந்துள்ளது.
அதுமட்டுமின்றி பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன் அவ் விண்கல் பல துண்டுகளாக சிதைந்து அங்குள்ள காட்டுப் பகுதியில் தீப் பிழம்பாக சிதறியுள்ளது. குறித்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகின்றது
Asteroid #C0WECP5 hit Siberia today 🌏☄️
📷Северный край pic.twitter.com/oiP1swEaZH
— Milky Way (@PanatpongJ) December 3, 2024