யாழில் தொடர்ச்சியாக மூன்று நாள்கள் நிலவிய காய்ச்சலால் காரணமாக குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ் வடமராட்சி, கெருடாவில் தெற்கு, மண்டபக்காடு பகுதியைச் சேர்ந்த கனகன் சண்முகம் (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
யாழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்றுமுன்தினம் காலை சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை பதில் மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா மரண விசாரணைகளை மேற்கொண்டார்.