தனியார் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர், 5 கோடி 50 இலட்சம் ரூபா பண மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன, வேபட பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய வைத்தியரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாட்டுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.