அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் வண்டி, புத்தளம் – பொலவத்தை சந்தியில் பெண் பாதசாரி ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (8) பிற்பகல் கொழும்பு – புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.