சளிப்பிடித்து வீட்டில் சிகிச்சை பெற்று தெமடபிட்டிய தம்மிக்ககம பகுதியைச் சேர்ந்த 3 மாத பெண் குழந்தை உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் பெற்றோர் தென்னை நார் ஆலை ஒன்றில் பணிபுரியும் தம்பதிகள் எனவும், இந்த குழந்தை இருவருக்கும் இரண்டாவது திருமணமானத்தின் ஊடாக பிறந்த குழந்தை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை சளித்தொல்லையால் பாதிக்கப்பட்டு வீட்டில் சிகிச்சை பெற்று வந்தது, குழந்தை பெற்றோருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்ததும் குழந்தையின் மூக்கில் இருந்து ரத்தம், பால் போன்ற திரவம் வடிந்திருப்பதும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.