மேஷம்:
மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச் சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப் படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்:
உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும். எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலகத்தில் சலுகைகள் கிடைக்கும்.. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மிதுனம்:
சகோதரர்களின் ஆதரவு உற்சாகம் தரும். தந்தைவழியில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய முயற்சி அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். சிலருக்குக் குடும்ப விஷயமாக திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
கடகம்:
தாய்வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரியங்களில் வெற்றியும் உண்டாகும். புதிய முயற்சியை காலையிலேயே தொடங்குவது நல்லது. வாகனத்தில் செல்லும்போது கவனமாகச் செல்லவும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.
சிம்மம்:
எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கூடியவரை இன்று புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்ய வேண்டி வரும். சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது மிகவும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் அதிகாரிகள் கடுமையாகப் பேசி னாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். வியாபாரத்தில் செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சலனம் ஏற்படக்கூடும்.
கன்னி:
புதிய முயற்சி சாதகமாக முடியும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம், வீண் அலைச்சலையும் செலவுகளையும் கொடுத்தாலும், சாதகமாக முடிந்துவிடும். மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு சகோதரர்களால் தர்மசங்கடமான நிலைமை ஏற்படக்கூடும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.
துலாம்:
எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் சந்தர்ப்பம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும்.
விருச்சிகம்:
மனதில் தைரியமும் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலாகச் செயல்படுவீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும். சிலருக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். வியாபாரத்தில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுவதுடன் லாபமும் அதிகரிக்கும்.
தனுசு:
மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும். கணவன் – மனைவிக்கிடையில் பரபஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. நீண்டநாளாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழும் வாய்ப்பு ஏற்படக் கூடும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும்.
மகரம்:
புதிய முயற்சி சாதகமாக முடியும். காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோத ரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க அதிகா ரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும். சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
கும்பம்:
மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். மனஉறுதியுடன் முடிவெடுத்து செயல்படுவீர்கள். சிலருக் குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக் கூடும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் என்றாலும், மகிழ்ச்சியான செலவா கவே இருக்கும். சிலருக்கு சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும், உரிய சிகிச்சையினால் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.
மீனம்:
இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தை களில் நிதானம் தேவை. வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு செயல்படுவது அவசியம். அலுவலகத்தில் சக ஊழியர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.. வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.