யாழில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்.!

0
90

பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் பகுதியில் நேற்று (9) மாலை இடம் பெற்றுள்ளது.

இந்தச் சம்பவத்தில் சங்கரன் தோட்டம் கரணவாய் தெற்க்கைச் சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது-48) என்ற பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில், வீட்டுக்கு அருகாமையில், உள்ள பனங்காணி ஒன்றில் தீயில் எரிந்த நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here