நேற்று யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்களின் பணிமனையில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி நேற்று யாழ்ப்பாணம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இன்று பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி மேலும் குறிப்பிடுகையில்..
MP அர்ச்சுனாவின் சேட்டைக்கு இனி இடமில்லை வாசலில் வைத்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
அனுமதி பெறாமல் உள்வந்தார் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தன்னை சேர் என அழைக்கக் கூறினார் அழைக்க முடியாது என்றேன்.
என்னை பணிப்பாளர் பதவியில் இருந்து தூங்குவேன் என்றார் முடிந்தால் தூக்கிக் காட்டுங்கள் என்றேன். என்னை பாராளுமன்றம் அழைத்தது கேள்வி கேட்பேன் என்றார் கேளுங்கள் என்றேன்.
2200 சேவையாற்றும் யாழ் போதனா வைத்தியசாலை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவார் ஆயின் வாசலில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்.
பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு முறையுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அங்கு நடந்த சம்பவத்தை சிலர் 30 செக்கன் விடீயோவை வெளியிட்டியிருந்தனர். அது கீழே இணைக்கப்படுள்ளது.
பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா என்ன நடந்தது என்று முழுமையான வீடியோவை வெளியிட்டுள்ளார்.