யாழ் இணுவில் கிழக்கு சேர்ந்த செல்வி கஜிஷனா தர்ஷன் என்ற மாணவி சதுரங்கத்தில் சாதனை படைத்துள்ளார்.
கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் கஜிஷனா தர்ஷன் சதுரங்க துறையில் தேசமே கொண்டாடும் வகையில் சாதனைகளை படைத்து வருகின்றார்.
இந்த சிறுமி தேசிய ரீதியில் இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளத்தினால் நடாத்தப்பட்ட சதுரங்க போட்டியில் வட மாகாணத்திற்கு ஏழு வயதிற்குட்பட்ட பிரிவில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்துள்ளார்.
இதன் மூலம் தாய்லாந்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசிய இறுதி போட்டியில் எமது நாட்டின் official player ஆக பங்குபற்றவுள்ளார்.
மேலும் சேர்ஜியாவில் நடைபெறவுள்ள உலக பாடசாலைகள் சதுரங்க போட்டிகளிலும் மற்றும் Fide cadet போட்டிகளிலும் இலங்கை அணியின் உத்தியோகபூர்வ வீரராக விளையாடவுள்ளார்.
இன்று வடமாகாணம் மட்டும் அன்றி இலங்கையில் மூன்று வகையான சதுரங்கத்தில் ரேட்டிங் கொண்டிருக்கும் ஒரே ஒரு சிறுமி இவர், Rapit சதுரங்க தரப்படுத்தலில் 1615 புள்ளிகளுடன் உலக அளவில் 4ம் இடத்தில் உள்ளார்.
இவர், இலங்கை ரீதியில் Battle of Mind இல் சாம்பியன் பட்டம், 9 வயதுக்குட்பட்ட பெண்கள் குழு போட்டியில் Board champion 2024 இல், வலய, மாவட்ட, மாகாண போட்டிகளில் முதலிடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.