எலிக்காச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் அண்மையில் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்கள் இன்று 10.12.2024 தெரிவித்துள்ளார்.
யாழில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களாக வடக்கில் எலிக்காச்சல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் யாழ் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
யாழ் போதான மருத்துவமனையில் நேரடியாக ஒருவர் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். மற்றும் பருத்தித்துறை மருத்துவமனையில் இருந்து 3 பேரும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் இருந்து ஒருவரும் இவ்வாறு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்கள்.
இவ்வாறு உயிரிழந்தவர்களின் வயது 20, 28, 33, 42, 65 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார்கள்.
மக்களுக்கான எச்சரிக்கை: தற்போது மாரிமழைபெய்துவருகின்றது மழைவெள்ளத்தில் செல்லாதீர்கள் விவசாயிகள் வயலில் செல்லும் போது உங்கள் கால்களுக்கு சப்பாத்துக்களை(மழைசப்பாத்து) அணிந்து செல்லுங்கள் குறிப்பாக விவசாயிகள் வெள்ளத்தில் சிக்குண்டவர்கள் மற்றும் ஆற்றங்கரைகளில் உற்பத்தியாகும் கசிப்பினை குடிப்பவர்கள் எலிக்காச்சலிலால் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள், ஆற்றங்கரைகளில் ஆற்றுத்தண்ணி மற்றும் வயல் தண்ணீர்களை ஊற்றியே மனிதனை கொல்லும் கசிப்பினை காச்சி வருகின்றார்கள், இந்த கசிப்பினை அருந்தும் பலரும் கடந்த காலங்களில் இவ்வாறு எலிக்காச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்; திடீரென ஏற்படும் அதிக காய்ச்சல் அல்லது லேசான காய்ச்சல், உடல் குளிர்தல், கண் வெண்மையாதல், இடுப்பு மற்றும் சில பகுதிகளின் தசை மென்மையாதல், கடுமையான தலைவலி மற்றும் சிறுநீர் வெளியேறுவது குறைவாக இருத்தல் போன்ற அறிகுறிகளின் மூலம் எலிக்காய்ச்சல் ஏற்பட்டுள்ளமையை அறிந்துகொள்ள முடியும்.
இந்தக் காய்ச்சல் கடைசிக்கட்டத்துக்குச் சென்றால், இருதயம் செயற்படாமை மற்றும் பல்வேறு உடற்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் நோயாளியை காப்பாற்றுவது கடினமாகும்.
இந்த விடீயோவை பாருங்கள்.. எப்படியான அறிகுறிகள், மற்றும் என்ன செய்ய வேண்டும் என்று தெளிவுபடுத்தப்படுள்ளது.