வவுனியாவில் காட்டு யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் உயிரிழப்பு.!

0
73

வவுனியா – வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக, பூவரசன்குளம் பாெலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான குறித்த நபர் நேற்று (10) மாலை தனது மாட்டினை வீடு நாேக்கி காெண்டு சென்ற பாேது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அண்மையில் வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

சம்பவத்தில் முன்னாள் கிராம அலுவலரான மோகனகாந்தி என்பவரே மரணமடைந்தவராவார்.

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக குறித்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளது. இதனால் அவ் வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here